இது லைபீரியா நாட்டில் இருக்கும் வெற்றிலை வள்ளி கிழங்கு ( பச்சையாக தெரிவது சர்க்கரைவள்ளி கிழங்கு)..
கிழங்கு முளைத்து வருவதற்காக சர்க்கரைவள்ளிக் கிழங்கின் ஈரத் தன்மை உடைய மூட்டில் போட்டு வைத்தேன். தற்போது மாற்றி நடவு செய்ய வேண்டும். வெற்றிலை வள்ளி கிழங்கில் பல ரகங்கள் உள்ளன அதில் இதுவும் ஒன்று.
அருகே காட்டுக்குள் மூடாக்குக்காக அள்ளி வந்த இலை தழைகள் மூலம் நம் உணவு காட்டிற்கு வந்து சேர்ந்தது.
இது இரண்டாம் தலைமுறை.
வள்ளி கிழங்கின் சிறப்பம்சம் என்னவென்றால் பருவத்தில் அறுவடை செய்யவில்லை என்றாலும் அதில் கடினத்தன்மை மாறாது.
குழி எடுத்து பொலபொலப்பான மண் கண்டத்தில் மக்குச்சத்து மற்றும் காய்ந்த இலைகள் கலந்து நடவு செய்தால் அருமையாக வளரும். (இது வழக்கமாக நான் அனைத்து செடிகளுக்கும் பின்பற்றும் முறை தான்) இது கொடிபோல படர்ந்து மரங்கள் வேலி என எதில் வேண்டுமானாலும் படர விடலாம்.
இதற்காக பெரிய இடம் தேவைப்படாது உயிர் சூழல் நிறைந்த உணவு காட்டில் எங்கு வேணாலும் வளர்க்கலாம்.
வெற்றிலை வள்ளி கிழங்கில் பொட்டாசியம், விட்டமின் b6, ரிபோஃப்ளோவின்(B2), வைட்டமின் K, மாங்கனீஸ், தயாமின், அமினோ ஆசிட், பீட்டா கரோட்டின், சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து ஜிங்க் சத்து மற்றும் விட்டமின் சி அபரிதமாக உள்ளது. முக்கியமாக பொட்டாஷியம் சத்து இதில் அதிகமாக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் மக்களின் உணவுத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கானாவில் Yam festival என இந்த கிழங்கிற்காக திருவிழா கொண்டாடுகின்றனர். குறிப்பாக நைஜீரியாவில் "இக்போ" என்ற பழங்குடியினர் கோலாகலமாக கொண்டாடுவார்கள்-The New Yam festival of Igbo people.
ஆம் இத்தனை ஊட்டச்சத்துக்களை அடக்கி வைத்திருந்தால் கொண்டாடப்பட வேண்டியது தானே. அப்போதுதானே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். இவர்களது சமூக வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. திருவிழாவின் துவக்கத்தின் பொழுது முன்னோர்களுக்கு படையல் செய்து நன்றி கடன் செலுத்தி பஞ்சத்தில் இருந்தும் காத்து உன்னதமான உணவான இந்த கிழங்கை உண்டு மகிழ்கின்றனர்
இந்தக் கிழங்கை அவித்து காய வைத்து பொடித்து பல பதார்த்தங்கள் செய்யலாம்
நாம் மறந்து விட்ட பாரம்பரிய கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று. உருளைக்கிழங்கு நம் அன்றாட உணவை ஆக்கிரமித்து விட்டது
#வெற்றிலை_வள்ளி_கிழங்கு
ஆரோக்கியமான உணவு நம் தேடலின் மூலம் தான் கிடைக்கிறது
#வீட்டுத்_தோட்டம்_அமைப்போம்
#பாரம்பரிய_நாட்டு_ரகத்தை_தேர்வு_செய்வோம்
#நஞ்சில்லா_உணவை_உண்டு_மகிழ்வோம்
#நாட்டு_விதைகளை_பரவல்_செய்வோம்
#இனி_விதைகளே_பேராயுதம்
#Pjsgarden

No comments:
Post a Comment